வைகாசி விசாக திருவிழா: பால்குடம் ஊர்வலம்

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதியில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். நான்கு ரத வீதிகளிலும் சென்ற ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது.

வள்ளி, தெய்வானையுடன் முருகன் அலங்காரத்தில் காட்சியளித்தார். அதனை தொடர்ந்து அபிேஷகம் நடந்தது. வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement