தேனி பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணி மந்தம்

தேனி, மே 29–

தேனி புது பஸ் ஸ்டாண்டில் மந்தமாக சீரமைப்பு பணிகள் நடப்பதால் பெயர்க்கப்பட்ட கற்களால் அகற்றப்படாமல் பயணிகள் அவதி அடைகின்றனர்.

தேனி புது பஸ் ஸ்டாண்டில் ரூ.1 கோடி மதிப்பில் நகராட்சி சார்பில் ரோடு சீரமைக்கும் பணிகள் 4 மாதங்களாக நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்டில் உள்ளூர் பஸ்கள் இயக்கப்படும் பகுதியில் கடந்த வாரம் சேதமடைந்த ரோடு, இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டது. அதன்பின் ஒருவாரம் கடந்தும் அங்கு குவிக்கப்பட்ட ரோடு கழிவு அகற்றவில்லை. புதிதாக ரோடு பணியும் துவங்கவில்லை. இதனால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். இரவில் பயணிகள் சிலர் உடைக்கப்பட்ட ரோட்டுப்பகுதியில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பள்ளி, கல்லுாரிகள் திறக்கும் முன்பு நகராட்சி அதிகாரிகள் விரைவாக ரோடு பணிகளை முடித்து கொடுக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement