காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் காட்சி பொருளாக மணிக்கூண்டு

காரைக்குடி, மே 29-–

காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில், பல ஆண்டுகளாக மணிக்கூண்டு பயன்பாடின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது.

காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர்,

சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் சென்று வருகிறது. புதுவயல், கல்லல், தேவகோட்டை உள்ளிட்ட சுற்று பகுதிகளுக்கு 30க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. முக்கிய சுற்றுலாத்தலமான காரைக்குடிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு, கடந்த 2000ம் ஆண்டு லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள் வசதிக்காக மணிக்கூண்டு அமைத்து கொடுத்தனர். இந்த மணிக்கூண்டு பல ஆண்டுகளாக காட்சி பொருளாக மட்டுமே இருப்பதால், பயணிகளுக்கு பயன்பாடின்றி கிடக்கிறது.

//

Advertisement