இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
அரூர்:' அரூர் வனச்சரக அலுவலர் வெங்கடேஷன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரூர் வனச்சரகத்தில் தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தில், 18,000 மரக்கன்றுகள் மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை-யாக்குதல் திட்டத்தில், 8,000 மரக்கன்றுகள் உற்-பத்தி செய்யப்பட்டுள்ளது.
இவை முற்றிலும் இல-வசமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. சித்தேரி மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு. 'சில்வர் ஓக்' மரக்கன்-றுகள், 10,000 எண்ணிக்கையில் உற்பத்தி செய்-யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு நகல், பட்டா, சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வழங்கி இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும், மரக்கன்றுகளை வளர்க்க அதிக வாய்ப்புள்ள போதுமான நீர்ப்பாசன வசதி, சுற்றுவேலிகள் அமைத்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மரக்கன்றுகளை பெறுவதற்கு, அரூர் வனச்சரக அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அரூர் வனச்சரக அலுவலர், 94425 44873, வனவர்கள், 99947 72316, 98424 36161, அலுவலக எண், 04346 - 291010 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.