திருப்பரங்குன்றத்தில் கூட்ட நெரிசல்; பக்தர்கள் மயக்கம்
மதுரை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்களில் சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் முதன்மையான வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், கூட்ட நெரிசலால் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்தவர்களைப் போலீசார் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். குடிநீர் உள்ளிட்டவற்றை கொடுத்தனர். கூட்டநெரிசலை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கையை எடுத்தனர்.
வாசகர் கருத்து (6)
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
30 மே,2026 - 20:39 Report Abuse
உங்கள் பூஜை அறையில் முருகப்பெருமான் உள்ளார் விளக்கேற்றி தீப ஆராதனை நெய்வேத்தியம் சமர்ப்பிக்கவும் ..செந்திலாண்டவர் அருள்பளிப்பர் அன்பர்களே 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
30 மே,2026 - 18:45 Report Abuse
ஹிந்து கோவில் என்றாலே, அதிகாரிகள் மற்றும் காவல் அலட்சியம். 0
0
Reply
Sriniv - India,இந்தியா
30 மே,2026 - 17:33 Report Abuse
Complete failure of the officials concerned. The Temple E.O. and district officials know that a large crowd is expected, so why didnt they take enough precautions ? Can the district administration not do proper crowd management ? 0
0
Reply
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
30 மே,2026 - 16:06 Report Abuse
இறைவன் உங்கள் மனதார நினைத்தால் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று வேண்டி உங்கள் உள்ளூரில் உள்ள முருகன் கோவில்களில் வழிபாடு செய்யுங்கள் 0
0
Reply
அம்பி குமார் பாலக்காடு - ,
30 மே,2026 - 15:50 Report Abuse
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அறநிலையத்துறை பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யவில்லை இதனால் பக்தர்கள் மயக்கம் அறநிலையத்துறை பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வில்லை இதற்கு பொறுப்பு ஏற்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement