பயனில்லாத காவல் உதவி மையம்
காரைக்குடி:சாக்கோட்டையில் உள்ள காவல் உதவி மையம் பயனின்றி கிடப்பதோடு, பஸ் ஸ்டாண்ட் உட்பட பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள இந்த உதவி மையம் விளம்பர மையமாக மாறி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட எல்லையாகவும், சிவகங்கை மாவட்டத்தின் நுழைவு வாயிலாகவும் சாக்கோட்டை உள்ளது. புதுக்கோட்டை, அறந்தாங்கி செல்லும் முக்கிய சாலையாக காரைக்குடி சாக்கோட்டை நெடுஞ்சாலையில் கண்டனுார், புதுவயல் பகுதிகளில் புற தகவல் நிலையங்கள் மற்றும் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையங்கள் மற்றும் செக் போஸ்ட்களில் போலீசார் இல்லாமல் காட்சி பொருளாக காணப்படுகிறது.
இதேபோல் பஸ் ஸ்டாண்ட்களில் பயணிகளுக்கு உதவி செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையமும் எவ்வித பயன்பாடுமின்றி மூடிக் கிடக்கிறது. தவிர மக்களுக்கு பயன்படக்கூடிய காவல் உதவி மையம் விளம்பர மையமாகவும் மாறி வருகிறது.