குன்றக்குடியில் வைகாசி விசாகம்
காரைக்குடி:குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வெட்டிவேர் அலங்காரத்தில்
சண்முகநாதப் பெருமான் எழுந்தருளினார்.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து சண்முகநாதப் பெருமான் வெட்டிவேர் அலங்காரத்தில் ஆதினமட கொலு மண்டபத்திற்கு எழுந்தருளினார். காலை 9:30 மணிக்கு ஆதின மடத்தில் பொன்னம்பல அடிகள் தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தமிழ் மாலை , திருமுழுக்காட்டல், பச்சை சாத்துப்படி பூஜை நடந்தது. இரவு, சண்முகநாதப் பெருமான் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. குன்றக்குடி, காரைக்குடி உட்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement