புதிய மனிதர்கள், புதிய சுவையை இணைக்கிறது இந்த ‘சப்பர் கிளப்!’

கோவை நகரம் தொழில், கல்வி வளர்ச்சியோடு, உணவு கலாசாரத்திலும் புதிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. ‘சப்பர் கிளப்’ எனும் தனியார் டைனிங் கம்யூனிட்டி இதன் ஒரு பகுதி.

இது சாதாரண ஓட்டல் அனுபவமல்ல; நண்பர்கள், அந்நியர்கள், உணவு ஆர்வலர்கள் அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து உணவுடன், உரையாடலையும் பகிரும் ஒரு உற்சாகமான கலாசாரம்.

எல்லோராலும் இதில் பங்கேற்க முடியுமா என்று கேட்டால், முடியாது. அழைப்பிதழ் அல்லது முன்பதிவு மூலம் மட்டுமே பங்கேற்க முடியும்.

பல சுவையான உணவை டேஸ்ட் பார்க்கலாம்; புதிய மனிதர்களின் அனுபவங்களை சுவைக்கலாம் என்பதுதான் இதன் முக்கிய ஐடியா.

பெங்களூருவில் பிரபலமான இந்த கலாசாரத்தை, கோவை கீரணத்தத்தில் உள்ள தன் வீட்டிலேயே ‘சீக்ரெட் சாசர்’ என்ற பெயரில் ஆரம்பித்த ஹர்ஷவர்தினி, ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 9 பேருக்கு மட்டுமே இடமளித்து, முன்பதிவு அடிப்படையில் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

“Dinner with strangers” என்ற இந்த அனுபவத்தில், இன்ஸ்டா மற்றும் பிற சமூக வலைத்தளங்கள் மூலம் மெனு மற்றும் தீம்கள் பகிரப்படுகின்றன. விருந்தினர்கள் தனியாகவும், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பங்கேற்கலாம்.

மாலை 7 முதல் 10 மணி வரை நடைபெறும் இந்த டைனிங் அனுபவத்தில், உணவு மட்டுமல்ல; நல்ல உரையாடல், புதிய நட்பு, மற்றும் இனிய நினைவுகளும் இணைகின்றன. பிறந்தநாள் விழா, திருமண நாள் கொண்டாட்டம், அலுவலக கூட்டங்கள் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

‘மூவி டின்னர்’, ‘ஸ்நாக்ஸ் நைட்’ போன்ற புதிய முயற்சிகளும் இளைஞர்களை ஈர்த்து வருகின்றன.

குறிப்பாக குடும்பத்தை விட்டு வேலை, படிப்புக்காக தனிமையில் இருக்கும் இளைஞர்களுக்கு, இந்த அனுபவம் ஒரு நல்ல சமூக இணைப்பாக மாறியுள்ளது.

சப்பர் கிளப்பை தொடர்பு கொள்ள: 96552 21699.

– ச.பிரவீணா

@quote@ இன்றைய வேகமான வாழ்க்கையில், குடும்பத்துடன் சேர்ந்து உணவருந்தும் பழக்கம் குறைந்து வருகிறது. அதனை மீண்டும் உயிர்ப்பிக்கவும், அந்நியர்களை ஆரோக்கியமான நண்பர்களாக மாற்றவும் இந்த சப்பர் கிளப் உதவுகிறது. – ஹர்ஷவர்தினிquote

@block_B@ ‘சப்பர் கிளப்’ என்பது ஸ்டார்ட் அப் முயற்சி கோவையில் இதை முன்னெடுப்பவர்களில் முக்கியமானவர் ஹர்ஷவர்தினி. கட்டடக் கலைஞராக இருந்த இவர், சமையலில் முன் அனுபவம் இல்லாதவராக இருந்தாலும், கர்ப்ப காலத்தில் பல்வேறு மல்டி- குசின் உணவு சமைக்க கற்றுக்கொண்டு, டெசர்ட்ஸ் தயாரிப்பில் திறனை வளர்த்தார். கணவரின் முழு ஆதரவுடன், புதிய ஸ்டார்ட்அப் முயற்சியாக சப்பர் கிளப் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.block_B

Advertisement