மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு

பென்னாகரம்; பென்னாகரம் அருகே உள்ள நல்லாம்பட்டி கிராமத்தில், தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் பள்ளி, கல்-லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் கடந்த ஒரு மாதத்-திற்கு மேலாக நடந்து வருகிறது. பயிற்சி முகாமில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், மல்லர் கம்பம், கோலாட்டம், உள்ளிட்ட பயிற்சி
கள் வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சியின் சிறப்பு நிகழ்வுகளாக, கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பல்வேல் திரையன் மூலம் வழங்கப்பட்டு களப்பயணமும் மேற்கொள்ளப்பட்-டது. தொடர்ந்து முதலுதவி சார்ந்து மருத்து-வர்கள் முனிராசு, தரண்குமார், அரவிந்த் பெருமாள் உள்ளிட்ட மருத்துவர்கள் முதலுதவி பயிற்சி வழங்கினர். கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நாளில் மாணவர்களுக்கு திருக்குறள் புத்-தகம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், உலக தமிழ் பண்பாட்டு சங்க சிறப்-புத்தலைவர் தமிழ் மகன் இளங்கோ மற்றும் மல்லர் கம்ப சங்க கவுரவத்தலைவர் மற்றும் சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்-பள்ளி தலைமை ஆசிரியர் பழனி ஆகியோர், மாணவர்களுக்கு திருக்குறள் சார்ந்த அறநெறி கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

Advertisement