மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தியை முன்னிட்டு 1,008 இளநீர் அபிேஷகம் நேற்று நடந்தது.
அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கியது.
அன்று முதல் புதுச்சேரியில் 7 முறை 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி, வெயில் தாக்கம் அதிகரித்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதனை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு மணக்குள விநாயகருக்கு 1008 இளநீர் அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இந்த சிறப்பு பூஜையில் கவர்னர் கைலாஷ்நாதன், விக்னேஷ் எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
மேலும்
-
87 ஆண்டு கல்விச்சேவையில் ஸ்ரீ மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளி அரசு நிர்ணயித்த கட்டணத்தைக்கூட பெறாமல் தரமான கல்வி வழங்கும் நிர்வாகம்
-
ஞாயிறு: கெத்து காட்டும் புதுச்சேரி காக்கிகள் ‘பிரசிடென்ட்ஸ் கலர்’ அங்கீகாரத்தால் குஷி
-
வைகாசி விசாக திருவிழாபால்குடம் ஊர்வலம்
-
டில்லி உஷ்
-
டிரம்ப் படத்துடன் கரன்சி வடிவமைப்பு பணி மும்முரம்
-
பெண்கள் பாதுகாப்புக்கு சக்தி ‘வார் ரூம்’ ஆந்திரா போலீசில் விரைவில் அறிமுகம்