சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று 189ம் ஆண்டு குரு பூஜை
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமியின் 189ம் ஆண்டு குரு பூஜை இன்று நடக்கிறது.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் கடந்த 26ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று குரு பகவான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலை வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கருவடிக்குப்பத்தில் அருள் பாலித்து வரும் குரு சித்தானந்த சுவாமியின் 189ம் ஆண்டு குரு பூஜை இன்று நடக்கிறது. அதனையொட்டி, நேற்று மாலை கணபதி ேஹாமத்துடன் குரு பூஜை துவங்கியது. இரவு 8 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது.
இன்று காலை 6 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், ருத்ர ஜபத்தை தொடர்ந்து, காலை 7:30 மணிக்கு சித்தானந்த சுவாமிக்கு மகா அபிேஷகம், பூர்ணாஹூதி, கலசாபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 10 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் செய்துள்ளனர்.
மேலும்
-
87 ஆண்டு கல்விச்சேவையில் ஸ்ரீ மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளி அரசு நிர்ணயித்த கட்டணத்தைக்கூட பெறாமல் தரமான கல்வி வழங்கும் நிர்வாகம்
-
ஞாயிறு: கெத்து காட்டும் புதுச்சேரி காக்கிகள் ‘பிரசிடென்ட்ஸ் கலர்’ அங்கீகாரத்தால் குஷி
-
வைகாசி விசாக திருவிழாபால்குடம் ஊர்வலம்
-
டில்லி உஷ்
-
டிரம்ப் படத்துடன் கரன்சி வடிவமைப்பு பணி மும்முரம்
-
பெண்கள் பாதுகாப்புக்கு சக்தி ‘வார் ரூம்’ ஆந்திரா போலீசில் விரைவில் அறிமுகம்