குட்டையில் கார் கவிழ்ந்து விபத்து
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, குட்டையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கம்மாபுரம் அடுத்த தே.பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் ரவி. இவர் நேற்று தனது காரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் முதனை கிராமத்தில் நடந்த தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார்.
திருமணம் நிகழ்ச்சி முடித்துவிட்டு, கம்மாபுரம் அடுத்த கோபலபுரம் அருகே தனது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அவரது மொபைல் போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. காரை ஓட்டிக்கொண்டிருந்த ரவி, டேஷ் போர்டில் இருந்த, மொபைல்போனை எட்டி எடுக்க முயன்றார்.
அப்போது, கார் நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த குட்டையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. உடன் அருகில் இருந்தவர்கள் காரில் இருந்த ரவி மற்றும் குடும்பத்தினரை மீட்டனர். இதில், அதிஷ்டவசமாக அனைவரும் காயங்களின்றி தப்பினர்.
இதுகுறித்து, கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ரூ.1.43 லட்சம் கோடி இலக்கு! லட்சியம் நிறைவேற முதல்வரிடம் ஏற்றுமதியாளர் முன்வைத்த கோரிக்கை
-
அமோக வரவேற்பு! பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்தததற்கு...: பின்னலாடை துறையினருக்கு நிம்மதி
-
மஹா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
-
முருகன் கோவில்களில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு
-
பயணியரிடம் கத்தியை காட்டி மிரட்டிய இருவர் சிக்கினர்
-
கணமூர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கல்யாண வைபவம்