முருகன் கோவில்களில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு

தர்மபுரி; தர்மபுரி டவுன் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிர-மணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல், மூலவ-ருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் சுவாமிக்கு தங்க கவச அலங்கார சேவையும், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தார். ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தர்மபுரி டவுன் அன்னசாகரம் விநாயகர் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் எஸ்.வி.,ரோடு சுப்ரமணிய சுவாமி கோவில், நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில், கடைவீதி அம்பிகா பர-மேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்திலுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி சன்னதி, இண்டூர் சிவ-சுப்பிரமணிய சுவாமி கோவில், பாப்பாரபட்டி புதிய சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பழைய சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பாலக்கோடு ஆறுபடை சக்தி
வேல் முருகன் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும், மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
---* அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அனுகிரக ஆஞ்சநேயர், வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிர
மணியர் கோவிலில், முருக பெருமானின் அவ-தார திரு
நாளான வைகாசி விசாகத்தையொட்டி, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்-காரம் நடந்தது.

Advertisement