மஹா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
நல்லம்பள்ளி; நல்லம்பள்ளி அருகே, பாளையம்புதுாரில் உள்ள மஹா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பாளையம்புதுார் கிராமத்தில் மஹா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டிற்கான தேர்திருவிழா கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பால்குடம் அழைத்தல், ஆஞ்சநேய-ருக்கு சிறப்பு பூஜை, மரக்கோட்டை முனியப்பன், பிடாரி அம்மன், காளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று, அம்மன் பெரிய தேர் இழுத்தல் நிகழ்ச்-சியில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், பக்தர்கள் அம்மன் தேர் மீது உப்பு, மிளகு துாவி வழிபட்டனர். மே, 31-ம் தேதி பந்தகாசி மற்றும் அம்மன் வீதி உலா நடக்க உள்-ளது. தொடர்ந்து, அம்மன் ஊஞ்சல் உற்சவம் மற்றும் மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.