கணமூர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கல்யாண வைபவம்


கிருஷ்ணகிரி; பர்கூர் அடுத்த கணமூர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மூலவரான லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. அதிகாலை முதல் யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. பத்துக்கும் மேற்பட்ட ஜீயர்கள் வேத மந்திரம் முழங்க, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில், மேள, தாளம் முழங்க லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.


திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் ஒப்பத்த-வாடி செல்வராஜ் கவுண்டர், ராஜலட்சுமி குடும்-பத்தினர் தலைமையில், கணமூர், பர்கூர், கிருஷ்-ணகிரி, நாட்றம்பள்ளி, ஒப்பத்தவாடி, பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லட்-சுமி நரசிம்மர் சுவாமிக்கு, வாசனை திரவியங்-களால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டன.

Advertisement