பயணியரிடம் கத்தியை காட்டி மிரட்டிய இருவர் சிக்கினர்

திருத்தணி: அருங்குளம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணியரிடம், கத்தியை காட்டி மிரட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி அடுத்த அருங்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, பேருந்து மூலம் திருத்தணிக்கு செல்வதற்காக, 10க்கும் மேற்பட்ட பயணியர் நேற்று காலை காத்திருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணியரிடம் கத்தியை காட்டி மிரட்டினர். தகவல் அறிந்த கனகம்மாசத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரு இளைஞர்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து, விசாரணை செய்ததில், வி.என்.கண்டிகையைச் சேர்ந்த கார்த்திக், 26, மகேந்திரன், 26, என, தெரிந்தது. இவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement