நடிகர் அஜித் தாயார் மோகினி மணி காலமானார்
சென்னை: நடிகர் அஜித் தாயார் மோகினி மணி ( வயது 85) சென்னையில் இன்று காலை காலமானார். துபாயில் இருக்கும் அஜித் சென்னை வருகிறார்.
நடிகர் அஜித் தாயார் மோகினி ஆவார். இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று (மே 30) மோகினி மணி காலமானார்.
துபாயில் தங்கியிருக்கும் நடிகர் அஜித்குமார், தாயாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு சென்னைக்கு விரைந்து வருகிறார். அஜித்தின் தாயார் மறைவை கேட்டு அவரது ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.
நடிகர் அஜித் தாயார் மோகினி மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:அஜித்குமார் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரை தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர், இபிஎஸ்
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதாவது: திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோகினி மணியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
முதல்வர் விஜய்
இது குறித்த முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கை: அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
@block_G@
அஜித் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை; ''எங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் அன்பான இரங்கல் செய்திகள், ஆறுதல் வார்த்தைகளால் நெகிழ்ந்து போயுள்ளோம். இந்த நேரத்தில் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவோ அல்லது செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்கவோ இயலாமல் இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தாயார் மோகினி மணி இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும்.
பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குக் கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம்'' என அஜித் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.block_G
@block_P@
அஜித்குமார் தாயாரின் இறுதி சடங்கு நாளை காலை 8:30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.block_P
மேலும்
-
87 ஆண்டு கல்விச்சேவையில் ஸ்ரீ மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளி அரசு நிர்ணயித்த கட்டணத்தைக்கூட பெறாமல் தரமான கல்வி வழங்கும் நிர்வாகம்
-
ஞாயிறு: கெத்து காட்டும் புதுச்சேரி காக்கிகள் ‘பிரசிடென்ட்ஸ் கலர்’ அங்கீகாரத்தால் குஷி
-
வைகாசி விசாக திருவிழாபால்குடம் ஊர்வலம்
-
டில்லி உஷ்
-
டிரம்ப் படத்துடன் கரன்சி வடிவமைப்பு பணி மும்முரம்
-
பெண்கள் பாதுகாப்புக்கு சக்தி ‘வார் ரூம்’ ஆந்திரா போலீசில் விரைவில் அறிமுகம்