ஆப்கானிஸ்தானில் லாரி கவிழ்ந்து விபத்து; 10 குழந்தைகள் உட்பட 18 பேர் பரிதாப பலி

காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தங்குவதற்கு விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலும் குடும்பங்கள் தங்கள் உடைமைகளுடன் லாரிகளில் பயணித்து வெளியேறுகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 447,400 ஆப்கானியர்கள் பாகிஸ்தானிலிருந்து திரும்பியுள்ளனர். அந்த வகையில் லாரியில் 50க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

அப்போது கிழக்கு ஆப்கானிஸ்தானில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பத்து குழந்தைகள், ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்திற்கும் தலைநகர் காபூலுக்கும் இடையிலான சாலையில் இந்த லாரி விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement