கிராம மாணவர்களுக்கு திறன் பயிற்சி
வடமதுரை:இந்திய நிலைத்த சமூக செயற்பாட்டு நிறுவனம் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு பள்ளி பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு கற்றல் வாய்ப்புகளை வழங்கி திறன், ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒரு மாத காலம் கோடை பயிற்சி முகாம் வடமதுரை பாகாநத்தத்தில் நடந்தது. 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 60 மாணவர்கள் பங்கேற்றனர்.
அடிப்படை கணினிக்கல்வி, ஓவியம், வரைகலை, பேசும் ஆங்கிலம், தற்காப்புக் கலைகள், யோகா உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டு படைப்பாற்றல் சார்ந்த செயல்முறை பயிற்சிகள், வழிகாட்டுதல்கள் பல்துறை நிபுணர்கள், பயிற்றுநர்கள் மூலம் வழங்கப்பட்டது.
முகாம் நிறைவு விழாவிற்கு இசை நிர்வாக அறங்காவலர் மகாலட்சுமி தலைமை வகித்தார். திட்ட ஆலோசகர் சுரேஷ் கண்ணா, பயிற்றுநர் துரை சந்தோஷ் முன்னிலை வகித்தனர். செயல் இயக்குநர் சின்னையா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் வீரமணி நன்றி கூறினார்.
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி