பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் புது தேர் உருவாக்கும் பணி: கடந்த ஆட்சியில் துவக்கியதோடு சரி
தொண்டாமுத்தூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி உற்சவ திருவிழாவின்போது, தேரோட்டம் நடக்கும். இதில் சோமாஸ்கந்தர், பச்சைநாயகியம்மன், சுப்பிரமணியர், விநாயகர், நடராஜர் ஆகிய 5 தேர்கள் உள்ளன.
மரத்தினால் ஆன இத்தேர்கள் சேதமடைந்துள்ளதால், புதிய தேர்கள் செய்ய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. முதல் கட்டமாக பட்டீஸ்வரர் தேரை, 1.41 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்க அரசு ஒப்புதல் அளித்தது.
கடந்தாண்டு நவ., 27ம் தேதி, அப்போதைய முதல்வர் ஸ்டாலின், இப்பணியை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். அதன்பின் பணி நடக்கவில்லை.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய தேர் உருவாக்கும் பணியின் துவக்கவிழா, கோவில் தேர்நிலையில் நடந்தது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் 65 அடி உயர புதிய தேர் செய்யும் பணியை துவக்கி வைத்தார்.
முன்னதாக அமைச்சர் சம்பத்குமார் சாமி தரிசனம் செய்தார். சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், துணை கமிஷனர் விமலா, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி