மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நடுவீரப்பட்டு: மலையாண்டர் கோவில் ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

இதையொட்டி, நேற்று மதியம் விநாயகர், ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், சுப்பரமணியர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது.

இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து, ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து, ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஊஞ்சலில் அம்மனுக்கு மகாதீபாராதனை நடந்தது. பூஜையில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Advertisement