ரவுடி ஐயப்பன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

4

திருநெல்வேலி: முகமூடி அணிந்து தொடர் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடி ஐயப்பனை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தற்போது சிகிச்சைக்காக ஐயப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முகமூடி அணிந்து தொடர் தாக்குதலில் ஈடுபட்ட நெட்டூர் ஐயப்பனை பிடிக்கச் சென்றபோது தாக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்; காயம் அடைந்த ஐயப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஐயப்பனை மாவட்ட எஸ்பி பிரசன்ன குமார் பார்த்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். ரவுடி ஐயப்பன் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் முத்துக்குமார் காயமுற்றார். ரவுடி ஐயப்பன் மீது ஆலங்குளத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது. அவர் சரித்திர பதிவேடு கொண்ட ரவுடி ஆவார்.


பிரத்யேக வீடியோ!

தொடர் தாக்குதல் வழக்கு: ரவுடி அய்யப்பன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கைது; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் பிரத்யேக வீடியோ நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement