இன்று முதல் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: கோவை, திருப்பூர் உட்பட 16 மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 8 செ.மீ., மழை பதிவானது.

தற்போது மத்திய மேற்கு, தென்மேற்கு மற்றும் குமரிக்கடல் வழியாக காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. அதேபோல், வளி மண்டலத்தில் மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

மேலும், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், ஜூன் 3ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், ஜூன் 3ம் தேதி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திரு வண்ணாமலை மாவட்டங் களில் இடி, மின்னல் மற் றும் பலத்த காற்றுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கன மழை பெய்யும்.

வெப்பநிலையை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் இயல்பை விட அதிகம் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement