தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் 9 பேர் கைது; மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் சதித் திட்டம் முறியடிப்பு

10

புதுடில்லி: இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட, இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகின்றான். இவன் அங்கு இருந்து கொண்டே இந்தியாவில் சதித் திட்டங்களை தீட்டி வருகின்றான்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய 9 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது; கைது செய்யப்பட்டவர்கள் டில்லி, மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். சில வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து பெரும் அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டில்லி, மும்பையில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதே இவர்களின் இலக்காக வைத்துள்ளனர். இவ்வாறு கூறினர்.

Advertisement