யோகா தின விழா
காரைக்குடி:காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் சத்தியன் தலைமை ஏற்றார். பள்ளி நிர்வாக இயக்குனர் சங்கீதா முன்னிலை வகித்தார். கல்வி சார்ந்த இயக்குனர் ராஜேஸ்வரி ஒருங்கிணைத்தார். முதல்வர் லூயிசா ரெமி வரவேற்றார்.
அமராவதி புதுார் ராஜராஜன் கல்வியியல் கல்லுாரி மற்றும் மற்றும் மகளிர் கல்வியியல் கல்லுாரியில் சர்வதேச யோகா தினம் நடந்தது. அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பையா வாழ்த்தினார். மகளிர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். தமிழ்நாடு ஐ .என்.ஓ., இணைச் செயலாளர் மதுரை வர்மா ஆசான் தம்பிதுரை யோகா குறித்து பேசினார்.
புதுவயல் வித்யாகிரி பள்ளியில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் தாளாளர் சுவாமிநாதன் தலைமையேற்றார். பள்ளி முதல்வர் குமார், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.