புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதி

வால்பாறை: தமிழக அரசின் உத்தரவு படி, பள்ளி, கல்லுாரி அருகில் புகையிலை பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வால்பாறை நகரில் மூன்று இடங்களில் போலீசார் குறியீடு அமைத்துள்ளனர்.

போலீசார் கூறுகையில், ‘சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில் உள்ள கடைகளில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை என்பதை குறிக்கும் வகையில், ரோட்டில் குறியீடு செய்து செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

Advertisement