தாழநல்லுார் தார் சாலை  அகலப்படுத்த கோரிக்கை 

பெண்ணாடம், மே 31–

தாழநல்லுார் செல்லும் தார் சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பெண்ணாடத்தில் இருந்து கோனுார் வழியாக தாழநல்லுார் செல்லும் தார் சாலையை பயன்படுத்தி பஸ், லாரி, பள்ளி வேன் உட்பட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

மேலும் திருமலை அகரம், வடகரை, நந்திமங்கலம், கோனுார் உட்பட, 10 பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

பெண்ணாடம் – தாழநல்லுார் வரையிலான சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், எதிரே வாகனங்கள் வரும் போது வழிவிட முடியாத நிலை உள்ளது.

மேலும், இரவு நேரம் மற்றும் மழைக்காலங்களில் வாகனங்கள் சாலையோர பள்ளத்தில் சிக்கி விளைநிலங்களில் கவிழும் அபாயம் உள்ளது.

எனவே, தாழநல்லுார் தார் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement