இளம் பெண் மாயம்

ஆண்டிபட்டி, மே 31 -

ஆண்டிபட்டி அருகே ஜம்புலிப்புத்தூரைச் சேர்ந்த பெயிண்டர் குணசேகரன் 51. இவரது இளைய மகள் லதா 22, தேனியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். இரு நாட்களுக்கு முன்பு குணசேகரன் தனது மகளை ஆண்டிபட்டியில் இருந்து தேனி செல்லும் பஸ்சில் வேலைக்கு அனுப்பி வைத்தார். லதா வேலை முடித்து திரும்ப வரவில்லை. தந்தை புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement