பாலமுருகன் கோவிலில் பால்குட ஊர்வலம்
உத்திரமேரூர், மே 31–
உத்திரமேரூர், கீழ்வெங்கடாச்சாரி தெருவில் உள்ள குபேர பாலமுருகன் கோவிலில், வைகாசி விசாக விழாவையொட்டி நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது.
உத்திரமேரூர் பேரூராட்சி, கீழ்வெங்கடாச்சாரி தெருவில் குபேர பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாக விழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி, 15ம் ஆண்டு வைகாசி விசாக விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள முத்து பிள்ளயைார் கோவில் வளாகத்தில் இருந்து, விரதம் இருந்த பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக குபேர பாலமுருகன் கோவில் வந்தடைந்தனர்.
அங்கு, மூலவருக்கு பெண் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பால் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தொடர்ந்து, குபேர பாலமுருகன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதணை நடந்தது.
மேலும்
-
வைகாசி விசாக விழா
-
மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா மாற்றம் புதிய கமிஷனராக கவுரவ் குமார் நியமனம்
-
சிலம்ப போட்டியை மதிப்பீடு செய்ய 'சென்சார் டிஜிட்டல் போர்டு' :மதுரை இளைஞரின் கண்டுபிடிப்பு
-
மூன்று ஆண்டுகளாக தொடருது உசிலை பஸ் ஸ்டாண்ட் பணி
-
சனாதன தர்மத்தை மீட்டெடுக்க வந்த அவதாரம் காஞ்சி மஹா பெரியவர் இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன் பேச்சு
-
கார்பைடு கற்களால் பழமாகும் மாங்காய்களால் உயிருக்கே உலை: நடவடிக்கையில் தொடரும் அலட்சியத்தால் அவதி