சனாதன தர்மத்தை மீட்டெடுக்க வந்த அவதாரம் காஞ்சி மஹா பெரியவர் இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன் பேச்சு
மதுரை: ''சனாதன தர்மத்தை மீட்டெடுக்க வந்த அவதாரம் காஞ்சி மஹா பெரியவர்,'' என, மதுரையில் அனுஷத்தின் அனு கிரகம் சார்பில் நடந்த அவரது 133வது ஜெயந்தி விழாவில் இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன் பேசினார்.
ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில் ஜெயந்தி விழாவின் முதல் நாளான நேற்று அவர் பேசிய தாவது: சனாதனம் என்பது வாழ்வியல் முறை. பெண், தன் கூந்தலை தாய் வீடு, புகுந்த வீடு, தான் எனும் 3 பங்காக பிரிக்கிறாள். இரு வீடுகளையும் தன்னை கொண்டு இணைப்பதே கூந்தல் பின்னுவதன் பொருள்.
இன்று பலர் மேற் கத்திய கலாசாரப்படி தலைவிரி கோலமாக இருக்கின்றனர். மஹா பாரதத்தில் பாஞ்சாலி தன் கூந்தலை விரித்ததால் போர் மூண்டு பலர் இறந்தனர். எனவே பெண்கள் கூந்தலை பின்ன வேண்டும்.
தாமரை, வில்வ இலை, பசுவின் பின்பகுதி, யானையின் நெற்றி, சுமங்கலியின் உச்சிப்பொட்டில் மகாலட்சுமி வாசம் செய் கிறாள். எனவே 'ஸ்டிக்கர்' பொட்டுகளை தவிர்த்து திருமண மான பெண்கள் உச்சியிலும், ஆகாதவர்கள் புருவ மத்தியிலும் குங்குமம் இட வேண்டும்.
யோகிகள், அடியார்கள், பக்தர்களின் வாக்கினை நிறைவேற்ற கடவுள் காத்திருக்கிறார். பிறர் துன்பத்தை தன் துன்பமாக கருதுவதுடன் அனை வரிடமும் இன்சொல் பேச வேண்டும். மனிதர் களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கு உண வளிப்பதும் அன்னதானம் தான். இவற்றையே சனா தனம் வலியுறுத்துகிறது.
தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகள் பொதிந்துள்ளன. 1960 களில் தமிழகமெங்கும் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு நடத்தி தமிழ் இலக் கியங்களை மக்களிடையே கொண்டு சேர்த்த காஞ்சி மஹா பெரியவர், தமிழ் மரபு, வாழ்வியல் நெறிகளை மீட்டெடுக்க வந்த அவதாரம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 10:00 மணிக்கு பல்துறை சாதனையாளர்களுக்கு மஹா பெரியவர் விருது வழங்கி எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசுகிறார். மதியம் 12:00 மணிக்கு பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், 'பெரியவர் எனும் பேர முதம்' தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார். மாலை 6:00 மணிக்கு சிறுவன் சூர்ய நாராயணனின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.
மேலும்
-
ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்; அதிபர் டிரம்ப் உறுதி
-
வானில் தோன்றும் நீல நிலா; இன்று இரவு காணத்தவறாதீர்கள்!
-
பெங்களூரு காதலா... குஜராத் மாடலா; ஆமதாபாத்தில் இன்று விறுவிறு பைனல்
-
கருணையுள்ள 'கரகாட்டக்காரன்'
-
மனதில் வேண்டாமே ஊனம்: -தங்கமகன் சந்தோஷ்
-
உதடு வறண்டிருந்தாலும் 'மேட் லுக்' மிஸ் ஆகாது