வைகாசி விசாக விழா

வாடிப்பட்டி: வாடிப்பட்டி தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயிலில் 104ம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா மே 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவையோட்டி பக்தர்கள் நேற்று அதிகாலை 4:00 மணி முதல் பால்குடம் எடுத்தும், வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே மவுனகுருசாமி மடத்தில் அலகு குத்தி, வீரப்பன் திடலில் பூக்குழி இறங்கினர். பின் 3 கி.மீ., பாதயாத்திரையாக கோயிலுக்கு சென்று சுவாமிக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்தனர். இன்றிரவு 7:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட பட்டுப்பல்லக்கில் எழுந்தருளி நகர் வலம், ஜூன்1 மாலை 6:00 மணிக்கு சீர்பாதம் தாங்கிகளுக்கு பாத்தியப்பட்ட ஈசநாட்டு கள்ளர் திருக்கண்ணில் இருந்து புறப்படாகி ராமலிங்கம் சேர்வை ஜோடனை மண்டபத்தில் அலங்காரம் நடக்கும். இரவு 11:59 மணிக்கு மேல் மின்னலங்கார பூப்பல்லக்கில் சுவாமி முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார்.

Advertisement