ஏர்போர்ட்டில் மாயமான ஐபோன் மீட்பு
மீனம்பாக்கம: விமான நிலையத்தில் தொலைத்த ஆந்திர நபரின் ஐ-போனை, போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
ஆந்திர மாநிலம், கபாலீஸ்வரபுரத்தைச் சேர்ந்தவர் மனிஷ், 28. கடந்த 29ம் தேதி இரவு, சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐபோனை தவறவிட்டார். இது குறித்த புகாரை அடுத்து, மீனம்பாக்கம் போலீசார், ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப உதவியுடன் மொபைல் போனை ‘டிராக்’ செய்தனர். அது, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு நின்ற நபரை பிடித்து, ஐ-போனை மீட்டனர்.
விசாரணையில், மீனம்பாக்கம் சிக்னல் பகுதியில் மொபைல் போரை கண்டெடுத்ததாக, அந்நபர் தெரிவித்தார். இதையடுத்து, ஐ-போன், உரிமையாளர் மனிஷிடம் ஒப்படைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement