வாலிபர் மீது தாக்குதல்

தேனி: அல்லிநகரம் பெரியார்நகரை சேர்ந்தவர் விஸ்வா 23. இவர் உழவர் சந்தை அருகே உள்ள ரோட்டில் டூவீலரில் சென்றார். அப்போது நாய் ஒன்று டூவீலரின் குறுக்கே ஓடியது. இதனால் நிலைதடுமாறினார். விஸ்வா, நாயை திட்டினார்.

அப்போது நாயின் உரிமையாளர்கள் விஸ்வாவுடன் வாக்குவாதம் செய்தனர். விஸ்வா தேனி போலீசில் புகார் செய்தனர். பிரச்னையில் சமரசம் பேச விஸ்வாவை, நாயின் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணன், வேங்கையன், முத்தையா, தெய்வேந்திரன் உள்ளிட்ட 6 பேர் அழைத்து சென்று தாக்கினர். இதில் காயம்பட்ட விஸ்வா, தேனி போலீசில் புகார் செய்துள்ளார். நகை திருட்டுதேனி: அப்பிபட்டியை சேர்ந்தவர் மதியழகன் 40. இவர் கோவையில் வசித்து வருகிறார். இவரது மனைவி தர்மதேவி, மகன் கவின் தேனியில் வசிக்கின்றனர். மதியழகன் தனது மனைவி, மகனை வால்பாறைக்கு சுற்றுலா சென்றார். மதியழகன் தாயார் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, 3 பவுன் கம்மல்கள் திருடுபோனது தெரிந்தது. இதுபற்றி மகனுக்கு தகவல் தெரிவித்தார்.மதியழகன் புகாரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் மாயம்தேனி: சோலைத்தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாத்தி 40. இவரது மகள் சர்மிளா. இந்நிலையில் வீட்டில் இருந்து சர்மிளா மாயமானார். ராஜாத்தி புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுவன் காயம்

தேனி: அல்லிநகரம் நாட்டாமை தெருவை சேர்ந்தவர் சேக் அப்துல்லா. இவரது மகன் சாதிக் பாட்சா 16. சிறுவன் அரண்மனை புதுார் அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத கார் மோதி சாதிக் பாட்சா காயம்பட்டார். புகாரின்பேரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement