வைகாசி விசாகம் சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்

கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமியை தரிசிக்க, செவ்வாய், ஞாயிறு, விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில், ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.

முருகனுக்கு உகந்த நாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமியை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் முருகனை தரிசித்து சென்றனர்.

Advertisement