டிராக்டர் கவிழ்ந்து விபத்து: ம.பி.,யில் 6 பேர் பலி

1

அனுப்பூர்:மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தின் பத்மானியா பகுதியில் இருந்து, பிஜாரா கிராமத்தில் உள்ள கோவில் நிகழ்ச்சிக்கு, 50 பக்தர்கள் டிராக்டரில் சென்றனர். நேற்று முன்தினம் மாலை கரன்பதார் பகுதியில் உள்ள பிஜாரா அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

Advertisement