இந்தியா-ஆஸ்திரேலியா ஹாக்கி தொடர் சமன்

பெர்த்: ஆஸ்திரேலியா சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. நேற்று, பெர்த்தில் 4வது போட்டி நடந்தது. இதில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு நவ்னீத் கவுர் (2வது நிமிடம்), தீபிகா சோரெங் (23வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலியா அணிக்கு ஆபி வில்சன் (42வது நிமிடம்), ஒலிவியா (44வது), கார்ட்னி ஷோனல் (58வது) கைகொடுத்தனர். நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2-2 என சமன் ஆனது.


இந்திய பெண்கள் அபாரம்

காகமிகஹாரா: ஜப்பானில், ஆசிய கோப்பை (18 வயது) ஹாக்கி தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு நவ்ஷீன் நாஸ் 2 கோல் (19, 28வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். மலேசியாவுக்கு நுார் அஸ்லி (41வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

இந்தியாவுக்கு 10 பதக்கம்

டா நாங்: வியட்நாமில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என, மொத்தம் 10 பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் திக் ஷா (43 கிலோ), கரீமா (73) தங்கம் வென்றனர். மற்ற இந்திய வீராங்கனைகளான நிகிதா (49 கிலோ), அந்த்ரா (65), தானியா (69) தலா ஒரு வெள்ளி கைப்பற்றினர். இந்தியாவின் பாலக் (40 கிலோ), அனாமிகா (46), அக் ஷ்ரா (53), சாக் ஷி (57), மான்யா (61) தலா ஒரு வெண்கலம் வென்றனர்.

Advertisement