பேக்கரி உரிமையாளர் வீட்டில் திருடிய 2 பேருக்கு 'காப்பு'

சேலம்:சேலம், சீலநாயக்கன்பட்டி, இ.பி., காலனியை சேர்ந்தவர் திருஞானம், 42. சீரகாபாடி,
சின்னப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பேக்கரி வைத்துள்ளார்.

இவரது வீட்டில், 54.5 பவுன் தங்க நகைகள், 100 கிராம் மதிப்பில் வெள்ளி பொருட்கள், 1.05 லட்சம் ரூபாய், 3 வாட்ச், கேஷியோ கேமரா ஆகியவை, சமீபத்தில் திருடுபோனது. அதன் மொத்த மதிப்பு, 28.65 லட்ச ரூபாய்.அவர் புகார்படி அன்னதானப்பட்டி போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரித்ததில், கைவரிசை காட்டியது, விருதுநகர் மாவட்டம் ராஜ
பாளையம், புத்துார் நல்லாமங்கலத்தை சேர்ந்த காமராஜ், 33, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார், கொல்லச்சேரி, ராஜாஜி தெருவை சேர்ந்த சுதர்சன், 36, என தெரிந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், அவர்கள் வாக்குமூலப்படி திருடிய நகைகள், பணம், பொருட்களை மீட்டனர்.

Advertisement