படகு சவாரி செய்து சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

ஏற்காடு:ஏற்காடில் கடந்த, 22 முதல், கோடை விழா, மலர் காட்சி நடந்து வருகிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அதேபோல் நேற்றும் ஏராளமானோர் குவிந்தனர்.

அவர்கள், அண்ணா பூங்காவில் மலர் காட்சியை கண்டுகளித்தனர். தொடர்ந்து சூழல் சுற்றுலா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்தனர். படகு இல்லத்தில் காலை முதலே படகு சவாரி செய்ய அதிகளவில் சுற்றுலா பயணியர் குவிந்தனர். அவர்கள் பயண சீட்டை வாங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Advertisement