'தினமலர்' செய்தி எதிரொலி: அரசு மருத்துவமனையில் கழிவறை பிரச்னைக்கு தீர்வு
கோவை: அரசு மருத்துவமனை கழிவறைகளில் அடைப்பு ஏற்பட்டால் சரிசெய்ய, தனித்தனி குழாய் பதிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
கோவை அரசு மருத்துவமனையில், உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுவோருக்கு, போதிய கழிவறை இல்லை. ஆண்களும், பெண்களும் ஒரே கழிவறையை பயன்படுத்தும் நிலை உள்ளதாகவும், நமது நாளிதழில், கடந்த 25ம் தேதி செய்தி வெளியானது.
இந்நிலையில் அரசு மருத்துவமனை டவர் 1, டவர் 2 ஆகிய இரு கட்டடங்களிலும் ஒவ்வொரு தளத்திலும், கழிவறைகளில் அடைப்பு ஏற்பட்டால் சரிசெய்வதற்காக, பிரத்யேக குழாய் பதிப்பதோடு, மழைநீர் வடிகால் அமைப்பை சரிசெய்யவும் வேலை நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement