டில்லி உணவகத்தில் தீ விபத்து; உயிரிழப்பு 21 ஆக அதிகரிப்பு
நமது டில்லி நிருபர்
டில்லி உணவகத்தில் ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
டில்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள உணவகத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. கட்டடத்திற்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவி வருவதால் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்த சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காயம் அடைந்த 37 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 11 பேர் மீட்கப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்திற்கான விசாரணை நடந்து வருகிறது என டில்லி போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது.
@block_P@
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: டில்லி தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் துயரமானவை. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.2லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.block_P
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
டில்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
துர்மரணங்களில் இந்தியாவுக்கே முதலிடம். ஆனால் யாருக்கும் அக்கறையில்லை
லெபனான் ஒரு தடவை போயிட்டு வாங்க ....இந்தியா சொர்க்கமா தெரியும் ... தளபதி ஆட்சியில் தமிழ்நாடு தேனாரில் மிதக்கிறது .. இருக்கிற ஒரே பிரச்னை டாஸ்மாக்கில் வாங்கும் பாத்து ரூபாய் ..அதை பற்றி இன்று விவாதித்து முடிவெடுப்பார்
உணவகத்தின் பெயரை குறிப்பிடுவதில்லை ...இங்கே அம்மா உணவகங்களில் தகுந்த பாதுகாப்பு தேவை ..டாஸ்மாக் பார்களிலும் தேவை
Flourish Bay B and B and Lemon Green hotel