இந்தியா உட்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி; அமெரிக்கா பரிந்துரை
வாஷிங்டன்: இந்தியா உட்பட 54 நாடுகள் மீது கூடுதலாக 12.5 சதவிகித இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்கள் கட்டாய உழைப்பு (Forced-labour) முறைகள் பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்கா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. தற்போது கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் தங்கள் சந்தைகளில் நுழைவதைத் தடை செய்யத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்தியா உட்பட 54 நாடுகள் மீது கூடுதலாக 12.5 சதவிகித இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்கா தன் மீது சுமத்தியுள்ள இந்தக் 'கட்டாய உழைப்பு' சார்ந்த அவதூறு புகார்களையும் அனைத்தையும் இந்தியா மிகத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி, கூடுதல் வரி விதிக்கும் முடிவை கைவிடுமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.
இந்தியா, சீனா, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட 54 நாடுகள், கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதி மீதான தடைகளை அறிமுகப்படுத்தி, திறம்படச் செயல்படுத்தத் தவறிவிட்டதால், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, அமெரிக்காவின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர்கள் டில்லியில் தற்போது மூன்று நாட்கள் தங்கி இந்திய அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நாடுகள் கட்டாய உழைப்பு முறையை தடுக்கும் வகையில் ஓரளவு நடவடிக்கை எடுத்து இருந்தால் 10% கூடுதல் வரி விதிக்கபடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
The total U.S. federal government debt is over US$38.9 டிரில்லியன்= US$ 38.9 Lakhs Crores = Rs. 3578 Trillion = Rs. 3578 lakhs crores = Rs. 35.78 Crores Crores debt அதாவது அமெரிக்க கடன் = ரூ 35,78,00,000 கோடி இதை கொஞ்சம் குறைக்கத்தான் இந்த 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி. இப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காத என்ற ஏக்கத்தில் தான் இந்த செயல்
Trump-க்கு இதே வேலையா போச்சு அவன் ஒரு பைத்தியக்காரன்யா என்ன பண்றதுன்னே தெரியல அமெரிக்க மக்களும் ரொம்ப கஷ்டப்படுறாங்க, Trump President ஆகுனதுல இருந்து.. அமரிகாவிலேயே நிலைம்மை ரொம்ப மோசமா இருத்து பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்குது மக்களின் வாழ்வாதாரங்களும் கேள்வி குறியாக இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தை சரி செய்வதற்கான மூளை, Trump இடம் இல்லை அதே போல், இஸ்ரேல் பிரதமர் Netanyahu, பொருளாதாரத்தை மேலும் மேலும வீழ்ச்சி அடைவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் உலகப் பொருளாதாரம் அதல்ல பாதாலத்துற்கு சென்று விட்டது அதற்கு காரணம் ட்ரம்ப்பும் நெட்டன்யாககும்...
ஆஹா நம் தமிழக உபிஸ் களுடைய ""ஜெனரல் நாலெட்ஜ்"" பிரமிக்க வைக்கிறது. அப்பளமும், ஊறுகாயும் தான் அதிகம் பிசினஸ் என்ற மிகத்தலையாய கருத்தை கூறியதற்கு அவர்களுக்கு ஒரு ஊறுகாய் பாட்டில் "" பார்சல்ல்"""......
மிஸ்டர் இந்திய மேதாவி அவர்களே கொஞ்சம் சுலோவாக .......ரா.. வை அடிக்கவும்.
அதிமேதாவி டிரம்ப்பு அவர்களே உங்க அமெரிக்க நிறுவனங்களின் """"இந்திய கிளைகள்""" அனைத்தும் """ கட்டாய உழைப்பையே""" தங்களின் தாரக மந்திரமாக வைத்துள்ளன. அமெரிக்காவிற்கு சாப்ட்வேர் சர்வீஸ் தரும்
இந்திய நிறுவனமோ அல்லது அமெரிக்க நிறுவனத்தின் கிளையோ, எதுவானாலும்
இந்திய ஊழியர்களின் கொட்டையை கசக்கி, """கடும் கட்டாய உழைப்பை"" உறிஞ்சுகின்றன. அதிமேதாவி டிரம்பு அவர்கள் முதலில் தன்னுடைய நாட்டு நிறுவனங்கள் உறிஞ்சும் """" கட்டாய உழைப்பை""" முதலில் நிறுத்தவும்.
பிறகு மற்றவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். உங்க முதுகு நாறுகிறது. அதை சரி செய்யுங்க முதலில்
அரசுக்கு வருமானம் குறைந்து கடன் வட்டி செலவும் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. பட்ஜெட்டில் துண்டு. அதனால்தான் இது போல வரிவிதிப்பு. கண்மூடித்தனமாக எல்லோருக்கும் இலவசங்களை வாரி வழங்கும் இங்குள்ள அரசுகளுக்கும் இது எச்சரிக்கை.
அப்பாடா... போர் பற்றி பயப்பட தேவை இல்லை... இன்னும் கொஞ்ச நாளில் டிரம்ப் இரான் ஐ மறந்து விடுவார்கள்... விடுவு காலம் உலக மக்களுக்கு பிறந்து விட்டது
அரசுக்கு வரி வரும். ஆனால் அந்த வரியை கொடுப்பவர்கள் அமெரிக்க மக்கள். இந்த புதிய வரி விதிப்பினால் இந்தியாவுடன் வர்த்தகம் சிறிதே குறைந்தாலும், நடைபெறுகிற வர்த்தகத்திற்கு வரி செலுத்தித் தானே ஆக வேண்டும். ஆனால் பாவம் அமெரிக்கர்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்.
ஒரு நிமிஷத்துக்கு ஒரு பேச்சு மற்றும் செயல்படுகின்ற இந்த அதிகார மம்தா பிடித்தவனுங்களை ஈரான்காரன் போடா நாயே என்று பயமில்லாமல் இருக்கிறான்.நாம் எதற்காக அந்த நாய்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மோடி உங்களுடன் மக்களாகிய நாங்கள் இருக்கிறோம்.
அமெரிக்க ராணுவம் கட்டாய உழைப்பில் செயல்படுகிறது
போய்த் தொலை
Let USA learn lesson that poor people too earn bread and butter by the way of working by their hands, and Nobody including USA gives anything free to them