சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 18 பேர் கைது; மேற்கு வங்க அரசு அதிரடி

12


கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 6 குழந்தைகள் உட்பட வங்கதேசத்தினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராக அம்மாநில பாஜ அரசுகடுமையான நடடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 6 குழந்தைகள் உட்பட வங்கதேசத்தினர் 18 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நேற்று இரவு (ஜூன் 02) நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் பிடிபட்டனர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், முகவர்களின் உதவியுடன் எல்லை வேலியைத் தாண்டி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளாகக் குல்தாலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்களில் சிலர் உள்ளூர் செங்கல் சூளைகளில் வேலை செய்தும் வந்துள்ளனர். இவர்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் பின்னணி சரிபார்க்கப்பட்ட பிறகு, அவர்கள் தற்காலிகத் தடுப்பு மையங்களுக்கு மாற்றப்படுவார்கள். அங்கிருந்து அவர்களை மீண்டும் வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்புவதற்கான நிர்வாக நடைமுறைகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று இரவு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் போலீஸாரும், குற்றப்பிரிவினரும் இணைந்து நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக ஊடுருவியதாகச் சந்தேகிக்கப்படும் 290க்கும் மேற்பட்ட வங்கதேச நாட்டினரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement