டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் வசூல் புகார்; முடிவு கட்ட முதல்வர் ஆலோசனை

7

சென்னை: டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு ரூ.10 வசூலிப்பதாக எழுந்து வரும் புகார்களுக்கு முடிவு கட்டும் வழிமுறை குறித்து அதிகாரிகள், அமைச்சருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்தது. கடந்த திமுக ஆட்சியில் மதுபாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டதை முதல்வர் விஜய், தேர்தல் சமயத்தில் கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு ரூ.10 வசூலிப்பதாக எழுந்து வரும் புகார் தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எம்.ஆர்.பி., கட்டணம் மட்டுமே மது பாட்டிலுக்கு வசூலிக்க வேண்டும்; எக்காரணம் கொண்டும் கூடுதலாக வசூலிக்கக்கூடாது. அதற்கான வழிமுறைகளை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும், பள்ளி, கோவில் அருகே இருக்கப்படும் 717 மதுக்கடைகள் மூடப்படும் நடவடிக்கை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

Advertisement