இந்திய எல்லை குறித்து கருத்து; நேபாள பிரதமர் பதவி விலக வலுக்கும் போராட்டம்

10

நமது நிருபர்





இந்தியாவுடனான எல்லை பிரச்னை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நேபாள பிரதமர் பாலேந்திர ஷா பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

அண்மையில் இந்தியா - நேபாள எல்லை பிரச்னை குறித்து அந்நாட்டு பார்லியில் பேசிய அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா, நேபாளமும் பல இந்திய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக கூறினார். மேலும், மிகவும் சிக்கலான இந்தப் பிரச்னையை, ஆங்கிலேயர்கள் காலத்தில் வகுத்த எல்லை என்பதால், பிரிட்டனை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறினார்.

ஆனால், எல்லை விவகாரத்தில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு, இருநாட்டு எல்லைப் பிரச்னையில் எந்தவொரு 3ம் தரப்பிற்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இதனிடையே, நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவின் இந்தப் பேச்சுக்கு அந்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாள பார்லியின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் முழக்கங்களால் முடக்கப்பட்டன.

மேலும், பாலேந்திர ஷா பதவி விலக வேண்டும் என்று வலிறுத்திகாத்மண்டுவின் மைதிகர் மண்டலாவில் மாணவர் அமைப்புகளும், நேபாளி காங்கிரஸ் சார்புடைய தருண் தளம் அமைப்பும் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நேபாளத்தில் வெடித்த கிளர்ச்சி மற்றும் போராட்டங்களினால் ஆட்சியைப் பிடித்த பாலேந்திர ஷாவுக்கு, பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே எதிர்ப்பலை கிளம்பியிருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement