ராஜ்யசபா சீட் பெறுவதில் காங்., மும்முரம்; முதல்வர் விஜய் உடன் ஆலோசனை நடத்துவோம் என்கிறார் கிரிஷ் சோடங்கர்
சென்னை: ராஜ்ய சபா சீட் தொடர்பாக முதல்வர் விஜய் உடன் ஆலோசனை நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கிரிஷ் சோடங்கர் கூறியதாவது:ராஜ்ய சபா சீட் தொடர்பாக முதல்வர் விஜய் உடன் ஆலோசனை நடத்தப்படும். இது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். முதல்வர் விஜய் தமிழகத்தின் ஒரு உயர்ந்த தலைவர் ஆவார். முதல்வர் விஜயும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரமும் நீண்ட நேரம் சந்தித்துப் பேசியதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தச் சந்திப்பு நிச்சயமாகத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததாக அமையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இண்டி கூட்டணியைப் பொறுத்தவரை, டில்லியில் தலைமை முடிவாகும். திமுக இண்டி கூட்டணியின் ஒரு அங்கமாக உள்ளது; எனினும், அதில் ஏதேனும் புதிய மாற்றங்கள் இருக்கிறதாஎன்பது எனக்குத் தெரியாது. இவ்வாறு கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
நம்பர் கண்ணில் படாமல் பாத்துக்கணும்
முதல்வர் பதவியை கூட கேட்பார். காங்கிரஸ்காரன் பேராசை பிடித்தவன்
நயவஞ்சக காங்கிரஸ்
காங்கிரஸ் என்பது ஒரு தேச விரோதக் கட்சி. இவர்ளுடன் கூட்டணி வைத்தால் அழிவு நிச்சயம். திராவிடத்தை வீழ்த்தியதற்காக மட்டும் உங்களை வாழ்த்தலாம். அதற்காக தேச விரோத சக்திகளோடு வைக்கும் கூட்டனியை ஆதரிக்க முடியாது. அவர்களை வைக்க வேண்டிய இடத்தில வைக்கவும். மக்களின் ஆதரவு திராவிடத்திற்கு எதிராக உங்களுக்கு எப்படிக் கிடைத்ததோ அதே ஆதரவுடன் உங்களுக்கெதிராக அண்ணாமலை அவர்கள் வருவார் என்பதை மனதில் வைத்து செயல்படவும். திராவிடக் கட்சிகள் முதியோர் இல்லங்கள் ஆகிவிட்டன. அண்ணாமலை அவர்களின் இளைஞர் பாட்டாளத்தை எதிர் கொள்ள தயாராக இருங்கள்.
விஜய் ஏமாந்து விடக் கூடாது. காங்கிரஸுக்கு வீட்டுக் குடுக்க கூடாது . indi கூட்டணி அழிவுக்கு அச்சாரம். மத்திய அரசுடன் இனைந்து செயல் படுவதே நல்லது .
இந்த காங்கிரஸ் கட்சியை இந்த அரசு கழற்றி விடுவதே நல்லது. திமுக இந்த விடயத்தில் அதிர்ஷ்டசாலிகள். இவர்களை கட்சியில் வைத்திருப்பதைவிட எடப்பாடியாரிடம் சென்று ஆதரவைப்பெற்று ஆட்சி அமைப்பதே மேல். காங்கிரஸ் ஒரு கொடிய விஷப் பாம்பு.
பேராசைக்கும் ஒரு எல்லை உண்டு. அவர்களால் டிவிகே-க்கு என்ன கொடுக்க முடியும்? மத்தியில் அவர்கள் ஆட்சியில் இல்லை. விஜய் தவறான திசையில் செல்கிறார். கடவுளால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும்.
காங்கிரஸ்காரனுக்கு பேராசை கூடிக்கொண்டே போகிறது . த வெ க வே 107 எம் எல் ஏ சொந்தமா வச்சிருக்கான். அவன் கட்சியில் இருந்து முதன் முதலில் ஒரு எம் பி அனுப்புவானா உன் கட்சிக்காரனை அனுப்புவானா ? த வெ க வே 3 எம்பி க்களை அனுப்பமுடியும் இடம் இருந்தால் தெரியுமா ??
திமுக வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர முக்கியமான காரணம் சிதம்பரம் அவர்கள். கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் விஜயை சந்தித்து வாழ்த்து கூற போய் இருக்கின்றாரே . இதெல்லாம் பார்க்கும் பொழுது யாரோ என்னமோ சொல்லட்டும் நாம் நம் காரியத்தில் கவனமாக இருப்போம் என்ற இவர்கள் மனோ நிலை புரிகின்றது.
உனக்கு இது வேற வேணுமாமேலும்
-
டில்லி உணவகத்தில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு
-
டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் வசூல் புகார்; முடிவு கட்ட முதல்வர் ஆலோசனை
-
சொல்கிறார்கள் –––––––––––– எங்கள் கிராமத்திலேயே வருமான வரி கட்டும் முதல் பெண் நான்!
-
தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு
-
இந்தியா உட்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி; அமெரிக்கா பரிந்துரை
-
சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 18 பேர் கைது; மேற்கு வங்க அரசு அதிரடி