பெண்ணை தாக்கியவர் கைது

தொண்டி: தொண்டி அருகே கீழ அரும்பூரை சேர்ந்தவர் சுகன்யா 32. அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக வரிசையில் நின்றார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணவேனிக்கும், சுகன்யாவிற்கு தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.

இதில் கிருஷ்ணவேனி அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து சுகன்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சுகன்யா புகாரில் தொண்டி எஸ்.ஐ., நாசர், இருவர் மீதும் வழக்குப்பதிந்து சுரேஷ்சை கைது செய்தார். 

Advertisement