புகார்களுக்கு கள ஆய்வின்படி தீர்வு: புதிய மாநகராட்சி கமிஷனர் உறுதி
கோவை: கோவை மாநகராட்சி கமிஷனராக கட்டா ரவி தேஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கும், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் உள்ள குறைகளை களைவதற்கும் கவனம் செலுத்துவேன்.
மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளை வலியுறுத்துவேன். புகார் வந்தது முதல் தீர்வு கண்டது வரை எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக சமர்ப்பிக்க வலியுறுத்துவேன்.
புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் இருக்காது. களஆய்வு வாயிலாக தீர்வு காணப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'மாநகராட்சி கவுன்சிலர்களில் 97 பேர் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். ஆனால் ஆட்சி த.வெ.க. கையில் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சியில் உங்கள் பணி சவாலாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா' என்ற கேள்விக்கு, ''விதிமுறைபடி நடப்போம்,'' என்றார்.
மேலும்
-
சொல்கிறார்கள் ––––––––––– 3 ஏக்கர் பப்பாளியில் ரூ.30 லட்சம் லாபம்!
-
மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்; வெற்றி தேடி வரும்; மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
பாஜ பெண் நிர்வாகி குறித்து ஆபாச பேச்சு; திமுக எம்பி மகன் கைது
-
ஸ்வீடனில் இருந்து வந்த போன் அழைப்பு: துரிதமாக செயல்பட்டு உயிர் காத்த மதுரை தீயணைப்பு வீரர்கள்
-
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 10 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு: போலீசில் புகார்
-
பைக் மீது கார் மோதல் 2 வாலிபர்கள் உயிரிழப்பு