சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் பண்ருட்டி மாணவர்கள் தங்கம் வென்று அசத்தல்

பண்ருட்டி: இந்தோனேஷியாவில்  நடந்த சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், பண்ருட்டி மாணவர்கள் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

 சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டி இந்தோனேஷியாவில்  நடந்தது.  இதில், 9 வயதினர் பிரிவில் , கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் எஸ்.பி.டி.எஸ். ஜெயந்தி வித்யாபீடம் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி இளவேனில் பங்கேற்று, 400 மீ., போட்டியில் தங்க பதக்கமும், 1000 மீ., போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றார்.

 அதுபோல்,  11 வயதினர் பிரிவில் மாணவர் பிரதீப்  400 மீ., போட்டியில் வெள்ளி பதக்கமும், 1000 மீட்டர் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார்.

 வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், வெற்றிக்கு உறுதுணையாக உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார், செந்தமிழ்செல்வி ஆகியோரை  பள்ளி தாளாளர் குமரேஷ், முதல்வர் சுபாஷினி ஆகியோர் பாராட்டினர்.

Advertisement