மாவட்டத்தில் பலத்த மழை: கெடாரில் 64 மி.மீ., பதிவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், சில தினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்வதால், வெயில் தாக்கம் சற்று தணிந்து மக்கள் மகிழ்ச்சிடையடைந்துள்ளனர்.
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு விழுப்புரம், விக்கிரவாண்டி, காணை, கெடார், கண்டமங்கலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் நேற்று காலை 8:00 மணி வரை பதிவான மழையளவு மி.மீ., விபரம்:
விழுப்புரம் 30, கோலியனுார் 24, வளவனுார் 22, கெடார் 64, முண்டியம்பாக்கம் 13, நேமூர் 22, கஞ்சனுார் 17, சூரப்பட்டு 15, அரசூர் 5, திருவெண்ணைநல்லுார் 10, மொத்தம் 221, சராரசரி 11 மி.மீ., மழை பதிவானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement