பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்ட பத்திரம் தொலைந்ததால் முடங்கியது முதிர்வுத் தொகை :பெற்றோர்கள் பரிதவிப்பு
முதல்வரின், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பத்திரம் தொலைந்ததால் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண் குழந்தைகளுக்கு முதிர்வுத்தொகை வழங்கப்படாமல் முடங்கியிருப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பங்களுக்கு முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்த பயனாளிகளில் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட அசல் பத்திரங்களை எதிர்பாராத விதமாக தொலைத்து விட்டனர். இன்னும் சிலருக்கு அந்த பத்திரங்களை அப்போதைய திட்ட அதிகாரிகள் வழங்கவில்லை எனவும் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்த இத்திட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன் சேர்க்கப்பட்ட ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த பெண் பிள்ளைகளுக்கு தற்போது 18 வயது நிறைவடைந்துள்ளது.
தற்போது அவர்கள் மேற்படிப்பிற்காக கல்லுாரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இரண்டு பெண்கள் உள்ள குடும்பங்களுக்கு இந்த முதிர்வுத் தொகை வழங்கப்பட்டால் அவர்களின் மேற்படிப்புக்கு உதவிகரமாக இருக்கும்.
எதிர்பாராத விதமாக அசல் பத்திரத்தை தவற விட்ட பெற்றோர்களுக்கு முதிர்வுத் தொகையை வழங்க சில ஆண்டுகளாக அதிகாரிகள் மறுத்து வருவதாக தெரிகிறது.
இதில் சிலர் தாங்கள் அசல் பத்திரத்தை தொலைத்து விட்டதற்கான சான்றுகளை வழங்கியும் அதிகாரிகள் அவர்களுக்கு முதிர்வுத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
கணினி தரவுகளை சரி பார்த்தோ அல்லது மாற்று வழிகளிலோ தகுதியான பயனாளிகளை உறுதி செய்ய அரசு துறையில் வழிவகைகள் உள்ளபோது, அசல் பத்திரத்தை காரணம் காட்டி ஏழை மக்களை அலைகழிப்பது நியாயமற்றது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, கலெக்டர் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு சிறப்பு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அசல் பத்திரங்களை தொலைத்த பயனாளிகளின் விபரங்களை மாற்றுச் சான்றுகள் மூலம் விரைந்து சரி பார்த்து 18 வயதைக் கடந்த தகுதியான அனைத்து பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் முதிர்வுத் தொகை தடையின்றி உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு